UPDATED : அக் 10, 2025 11:43 PM
ADDED : அக் 10, 2025 11:39 PM

புதுடில்லி:செப்டம்பர் மாத டிராக்டர் விற்பனை அறிக்கையை டிராக்டர்கள் மற்றும் இயந்திரமயமாக்கல் சங்கம் வெளியிட்டுள்ளது. கடந்த மாதத்தில் உள்நாட்டு டிராக்டர் விற்பனை, 45.39 சதவீதம் உயர்ந்து, வரலாறு காணாத விற்பனையை எட்டியுள்ளது.
![]() |
கடந்த ஆண்டு செப்டம்பரில், 1 லட்சம் டிராக்டர்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு செப்டம்பரில் 1.46 லட்சம் டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஏற்றுமதி 10 சதவீதம் உயர்ந்து, 8,237 டிராக்டர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டிலும் ஏற்றுமதியும் சேர்ந்த, மொத்த விற்பனை, 43 சதவீதம் உயர்ந்து, 1.54 லட்சம் டிராக்டர்கள் என்ற உச்சத்தை எட்டின.
நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், டிராக்டர் விற்பனை இரட்டிப்பாகி உள்ளது.
![]() |
நவராத்திரி முதல் புதிய ஜி.எஸ்.டி., அமலானதும், இந்த விற்பனை உயர்வுக்கு முக்கிய காரணம். அதே சமயம், டிராக்டர்கள், அவற்றின் உதிரிபாகங்கள் மற்றும் டயர்களுக்கான ஜி.எஸ்.டி., 5 சதவீதமாக குறைக்கப்பட்டதால், ஒரு டிராக்டருக்கு 40,000 முதல் 60,000 ரூபாய் வரை, விவசாயிகளுக்கு செலவு குறைவதாக கூறப்படுகிறது.
கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரிப்பு, பயிர் சாகுபடிக்கு தேவையான மழை, விவசாய இயந்திரமயமாக்கல் ஊக்குவிப்பு, ஆகியவை வரும் தீபாவளி, அடுத்து வர உள்ள குறுவை சாகுபடி வரை டிராக்டர் தேவையை நீடிக்க செய்ய உதவும் என எதிர்பார்ப்பு