UPDATED : அக் 26, 2025 01:20 AM
ADDED : அக் 26, 2025 01:19 AM

புதுடில்லி: நாட்டின் நிதித்துறை நிறுவனங்களில் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் வரை, 70,400 கோடி ரூபாய் மதிப்பிலான இணைப்பு மற்றும் கையகப்படுத்தல்கள் நடைபெற்றுள்ளதாக கிராண்ட் தார்ன்டன் பாரத் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கடந்தாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில், 127 சதவீதம் அதிகம்.
![]() |
வழக்கத்துக்கு மாறாக நடப்பாண்டு, இரண்டு இந்திய வங்கிகளின் பெருவாரியான பங்குகளை வெளிநாட்டு வங்கிகள் வாங்க முன்வந்துள்ளன. இதில், யெஸ் பேங்க் - எஸ்.எம்.பி.சி., ஒப்பந்தம் நிறைவேறியுள்ளது.
முடிவு செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் அதிகபட்சமாக துபாயை சேர்ந்த எமிரேட்ஸ் என்.பி.டி., வங்கி, நம் நாட்டின் தனியார் துறையைச் சேர்ந்த ஆர்.பி.எல்., வங்கியின் 60 சதவீத பங்குகளை, 26,400 கோடி ரூபாய்க்கு வாங்க முன்வந்துள்ளது. இன்னும் கையகப்படுத்தல் நடைபெறாததால், இது மொத்த ஒப்பந்த மதிப்பில் சேராது.
![]() |


