ADDED : செப் 08, 2025 12:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:மின் உற்பத்தி துறையில் குறிப்பாக புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில், 5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய இருப்பதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :
அதானி குழுமம் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறனை, 2029- - 30ம் நிதியாண்டுக்குள் 50 கிகாவாட் உற்பத்தி திறனாக அதிகரிக்க, 1.80 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
மின் பரிமாற்றம் மற்றும் வினியோக திறன் மையங்களை அமைக்க, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், 1.46 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.
அதானி பவர் வாயிலாக தற்போது 17.60 கிகாவாட்டாக உள்ள மின் உற்பத்தி திறனை, 2032ம் ஆண்டுக்குள் 41.90 கிகாவாட்டாக அதிகரிக்க, 1.89 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.