UPDATED : ஜன 13, 2024 11:53 AM
ADDED : ஜன 09, 2024 05:52 AM
சென்னை: அதானி குழுமம், தமிழகத்தில் 42,768 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
'அதானி கிரீன் எனர்ஜி' நிறுவனம், திருவண்ணாமலை மாவட்டத்தில் 24,500 கோடி ரூபாய், 'அதானி கனெக்ஸ்' நிறுவனம் சென்னையில் 13,200 கோடி ரூபாய், 'அம்புஜா சிமென்ட்' 3,500 கோடி ரூபாய், 'அதானி டோட்டல் காஸ்' நிறுவனம் 1,568 கோடி என மொத்தம் 42,768 கோடி ரூபாய் முதலீடு செய்கின்றன. இதனால், 10,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஹிந்துஜா 1,200 கோடி ரூபாய் முதலீடு செய்ய, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் வாகன துறையில் புத்தாக்கம், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், வணிக விரிவாக்கத்திற்காக இந்த முதலீடு உதவும். இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், அரசு - - தனியார் கூட்டுமுயற்சி கொள்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.