பூடான் நீர்மின் உற்பத்தி திட்டம் அதானி குழுமம் அடிக்கல்
பூடான் நீர்மின் உற்பத்தி திட்டம் அதானி குழுமம் அடிக்கல்
ADDED : ஜன 05, 2026 01:31 AM

பூடானில் 570 மெகாவாட் திறன் கொண்ட வாங்ச்சூ நீர்மின் உற்பத்தி திட்டத்துக்கு, அந்நாட்டின் பிரதமர் ஷெரிங் டோப்கே முன்னிலையில், அதானி குழும தலைவர் கவுதம் அதானி அடிக்கல் நாட்டினார்.
பூடானில் 5,000 மெகாவாட் நீர்மின் திட்டங்களை இணைந்து செயல்படுத்துவது தொடர்பாக, கடந்தாண்டு மே மாதத்தில் பூடானின் டிரக் கிரீன் பவர் கார்ப்பரேஷன், அதானி குழுமம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் ஒரு பகுதியாக, முதல் திட்டமாக வாங்ச்சூ நீர்மின் திட்ட அறிவிப்பு, கடந்த செப்டம்பரில் வெளியிடப்பட்டிருந்தது.
இதன்படி, புதிய நீர்மின் உற்பத்தித் திட்டத்தில், 51 சதவீத பங்குகள் பூடானின் டிரக் கிரீன் பவர் கார்ப்பரேஷன் வசமும், மீதமுள்ள 49 சதவீத பங்குகள் அதானி குழுமம் வசமும் இருக்கும். 6,000 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் இத்திட்ட பணிகள், 5 ஆண்டுகளில் நிறைவடையும்.

