ADDED : நவ 21, 2024 02:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பையில் ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ வர்த்தக மையத்துக்கு நிகராக, தங்கள் குழுமத்தின் சார்பில் சர்வதேச வர்த்தக மையம் அமைக்க அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட 17,000 கோடி ரூபாயில், மும்பையின் மிகப்பெரிய சர்வதேச மையமாக அமையவுள்ள அது, விமான நிலையத்தின் அருகே இடம் பெறுகிறது.
மையத்தின் வடிவமைப்புக்கு, மும்பை பெருநகர மண்டல மேம்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் இறுதிக்கட்ட கட்டட வரைபட ஒப்புதல் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15 லட்சம் சதுர அடியில், 20,000 பேர் பங்கேற்கக்கூடிய அரங்கங்களுடன் அதானியின் மையம் அமையும். அதில், ஹோட்டலுடன் 275 அறைகளும்; 3 லட்சம் சதுர அடி வாகன நிறுத்துமிடமும் இடம் பெறும்.