ADDED : டிச 06, 2025 02:07 AM

புதுடில்லி: அதானி, ஹிண்டால்கோ நிறுவனங்கள், பெரு நாட்டின் செம்பு உற்பத்தி துறையில் களமிறங்க திட்டமிட்டுள்ளன.
இவை கூட்டாகவோ அல்லது அங்குள்ள சுரங்க நிறுவனங்களின் பங்குகளை வாங்கியோ, அங்கு முதலீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக இந்தியாவுக்கான பெரு துாதர் ஜாவியர் பாலின்ச் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பெருவில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய, இவ்வாண்டின் தொடக்கத்தில் அதானி நிறுவனம், ஒரு வர்த்தக துாது குழுவை எங்கள் நாட்டுக்கு அனுப்பியது. அதேபோன்ற முயற்சிகளை ஹிண்டால்கோவும் செய்து வருகிறது. அந்நிறுவனங்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்.
இவ்வாறு தெரிவித்தார்.
அதிக அளவில் செம்பு இறக்குமதியில் உலகில் இந்தியா 2ம் இடம் கடந்த 2024 - -25ல் இந்தியாவின் செம்பு இறக்குமதி 12 லட்சம் டன் வரும் 2030ல் செம்புக்கான தேவை 3,0-33 லட்சம் டன்னாக உயரும்.

