ADDED : செப் 07, 2025 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ தானி பவர் நிறுவனத்தின் பங்குகளை 1: 5 என்ற விகிதத்தில் பிரிக்க, பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட ஒரு பங்கு, தலா 2 ரூபாய் முகமதிப்பு கொண்ட ஐந்து பங்குகளாக பிரிக்கப்பட உள்ளன. இதற்காக, கடந்த ஆக.6ல் துவங்கி செப்.4 வரை தபால் ஓட்டெடுப்பு நடைபெற்றது.
இதில், பெரும்பாலான பங்குதாரர்கள் பங்குகளை பிரிக்க ஒப்புதல் அளித்துள்ளனர். இதையடுத்து, அதானி பவர் நிறுவனத்தின் 2,480 கோடி பங்குகள், தற்போது 12,400 கோடி பங்குகளாக அதிகரித்துள்ளன.