சென்னையில் 'அடிடாஸ்' நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையம்
சென்னையில் 'அடிடாஸ்' நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையம்
ADDED : ஜன 05, 2024 12:25 AM

சென்னை:உலகின் மிகப்பெரிய விளையாட்டு காலணிகள் மற்றும் ஆடைகள் பிராண்டான ஜெர்மனியின் 'அடிடாஸ்', சீனாவுக்கு அடுத்ததாக, அதன் முதல் ஆசிய உலகளாவிய திறன் மையத்தை, தமிழகத்தில் அமைக்க முடிவு செய்துஉள்ளது.
சென்னையில் அமையவுள்ள இந்த மையத்தில், பெருமளவு வளர்ச்சியை எதிர்பார்ப்பதாகவும்; அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் பெரிய மதிப்பு வளங்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும், அடிடாஸ் தெரிவித்துஉள்ளது.
இது குறித்து தொழில்துறை அமைச்சர் ராஜா கூறியதாவது:
நீண்டகாலமாகவே சிறந்த தகவல் மையமாகவும், தொழில்துறை சக்தியாகவும் தமிழகம் விளங்கி வருகிறது. திறன்களை நிரூபிப்பதிலும்; முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
நம் மாநிலத்தில், கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள் பணிபுரியும் காலணித் துறையில் இந்த முன்னேற்றம் நன்றாகத் தெரிகிறது.
இதனால் பெரிய காலணி உற்பத்தியாளர்கள், தங்கள் உலகளாவிய திறன் மைய செயல்பாடுகளுக்கு, சென்னையை சிறந்த இடமாக பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.