sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 ஏற்றுமதி ஆடை தயாரிப்புக்கும் வணிக காஸ் ஒதுக்க வேண்டும் ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கோரிக்கை

/

 ஏற்றுமதி ஆடை தயாரிப்புக்கும் வணிக காஸ் ஒதுக்க வேண்டும் ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கோரிக்கை

 ஏற்றுமதி ஆடை தயாரிப்புக்கும் வணிக காஸ் ஒதுக்க வேண்டும் ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கோரிக்கை

 ஏற்றுமதி ஆடை தயாரிப்புக்கும் வணிக காஸ் ஒதுக்க வேண்டும் ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கோரிக்கை


ADDED : மார் 16, 2026 01:45 AM

Google News

ADDED : மார் 16, 2026 01:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: ''வணிக பயன்பாட்டுக் கான, 20 சதவீத காஸ் ஒதுக் கீட்டில், ஏற்றுமதி ஆடை தயாரிப்பு தொழிலையும் சேர்க்க வேண்டும்,'' என ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி, தொழில் துறை அமைச்சர் ராஜா ஆகியோருக்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் சக்திவேல் அனுப்பியுள்ள கடிதம்:

இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக, வணிக காஸ் வினியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆடை தயாரிப்பு துறையிலும், காஸ் முக்கிய எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.

தேவையின் அடிப்படையில் தொழில்துறைக்கு காஸ் சிலிண்டர் ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தை, மத்திய அரசு, மாநில அரசு களுக்கு வழங்கிஉள்ளது.

அதன்படி, வர்த்தக பயன்பாட்டிற்காக, 20 சதவீத காஸ் ஒதுக்கப்பட்டுள்ளது. அவசியமான துறைகளுக்கு, இந்த 20 சதவீதம் காஸ் ஒதுக்கப்படும். இந்த பிரிவில், ஏற்றுமதி ஆடை தயாரிப்பு தொழிலையும் சேர்க்க வேண்டும்.

தமிழகத்தில் ஆயத்த ஆடை ஏற்றுமதி துறை ஒரு முக்கிய துறையாக உள்ளது.

இதனுடன் தொடர்புடைய, 'நிட்டிங்' சாயத் தொழில், சலவை, காம்பாக் டிங், பினிஷிங் போன்ற பல 'ஜாப் ஒர்க்' துறைகள் இயங்கி வருகின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் தடையின்றி இயங்க , எல்.பி.ஜி., காஸ் அவசியம்.

தற்போதைய, காஸ் சிலிண்டர் பற்றாக்குறை நீடித்தால், பல நிறுவனங்கள் தற்காலிகமாக செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

ஆடை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி முழுதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால், தயாரிப்பு பாதிக்கப்பட்டால், ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்து செய்யப்படும்; வணிக வாய்ப்புகள் போட்டி நாடு களுக்கு மாறும் அபாயமும் உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us