இந்தியாவுடன் ஜவுளி வர்த்தகம் அதிகரிக்க ஆப்கன் விருப்பம்
இந்தியாவுடன் ஜவுளி வர்த்தகம் அதிகரிக்க ஆப்கன் விருப்பம்
ADDED : நவ 26, 2025 01:32 AM

புதுடில்லி:இந்தியா -- ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான ஜவுளி வர்த்தகத்தை அதிகரிக்க இரு தரப்பும் பேச்சு நடத்தி வருகின்றனர்.
ஆப்கானிய பொருளாதர உறவுகள் துறையின் இயக்குநர் ஜெனரல் ஷபியுல்லா ஆசம் தலைமையிலான வர்த்தக துாதுக்குழு இந்தியா வந்துள்ளது.
இந்திய ஜவுளி அமைச்சகத்தின் வர்த்தக ஆலோசகர் பிபின் மேனன் தலைமையிலான குழுவுடன் அது பேச்சு நடத்தியது.
அதனையடுத்து ஜவுளி அமைச்சகம் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஆப்கானிஸ்தானில் ஜவுளி உற்பத்தி துறையின் சூழலை மென்மேலும் பலப்படுத்தும் நோக்கத்துடன் இருப்பதாக ஆப்கன் துாதுக்குழு கூறியுள்ளது.
மேலும், அத்துறையில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது, பருத்தி விவசாயிகளுக்கு பயிற்சியளிப்பது ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அது தெரிவித்து உள்ளது.
இந்தியா -- ஆப்கன் இருதரப்பு ஜவுளி வர்த்தக உறவுகள் வலுவாக உள்ளன. ஆப்கனுக்கு அதிக அளவில் ஜவுளி, ஆடைகளை ஏற்றுமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடு இந்தியாதான்.
கடந்த ஆண்டில் 613 கோடி ரூபாய் அளவுக்கு ஆப்கனுக்கு இந்தியா ஏற்றுமதி செய்திருக்கிறது.
அதேபோல, கடந்த ஆண்டில் உலகமெங்கும் உள்ள பல நாடுகளில் இருந்து ஆப்கானிஸ்தான், 6,629 கோடி ரூபாய் அளவுக்கு ஜவுளி மற்றும் ஆடைகளை இறக்குமதி செய்துள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பருத்தி உற்பத்தி நாடான இந்தியா, தனது நிபுணத்துவத்தை தன்னுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஆப்கன் கேட்டுக்கொண்டு உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜவுளி துறையில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது, பருத்தி விவசாயிகளுக்கு பயிற்சிக்கு முன்னுரிமை

