ADDED : நவ 25, 2025 01:03 AM

புதுடில்லி: க்விக் காமர்ஸ் சந்தையில், வருமானம் அடிப்படையில், உலகளவில் மூன்றாவது மிகப்பெரிய நாடாக இந்தியா திகழ்வதாக சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஸ்டேட்டிஸ்டா புரோஜெக்சன்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் அது தெரிவித்துள்ளதாவது:
சீனா, அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது. ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளை விட அது முன்னிலையில் உள்ளது. இந்தியாவில் இந்தாண்டு க்விக் காமர்ஸ் பிரிவின் வருமானம் 47,350 கோடி ரூபாயாக இருக்கும்.
மேலும், பல்வேறு நகரங்களுக்கு சேவை விரிவடைந்து, வரும் 2030ம் ஆண்டுக்குள் வருமானம் இரண்டு மடங்காக, 97,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும். டாப் 3 நாடுகளில், 2025- - 2030ம் ஆண்டில் அமெரிக்காவில் வளர்ச்சி 6.72 சதவீதமாகவும், சீனாவில் 7.90 சதவீதமாகவும் இருக்கும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.
இந்திய க்விக் காமர்ஸ் வருவாய் ரூ. 47,350 கோடி 2030ல் வருவாய் கணிப்பு ரூ. 97,000 கோடி (இருமடங்கு) க்விக் காமர்ஸ் பயனர்கள் 6.50 கோடி ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதம் 15.50 சதவீதம்

