டில்லியில் மே 17,18 தேதிகளில் அகர்பத்தி, வாசனை திரவிய கண்காட்சி
டில்லியில் மே 17,18 தேதிகளில் அகர்பத்தி, வாசனை திரவிய கண்காட்சி
ADDED : மார் 26, 2025 11:11 PM

டில்லியில் வரும் மே மாதத்தில் நடைபெறவுள்ள 10வது சர்வதேச அகர்பத்தி மற்றும் வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சியில், 200 நிறுவனங்கள் பங்கேற்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மே 17, 18 ஆகிய இரண்டு நாட்கள் 'யேஷாபூமி' என்ற இடத்தில் நடைபெறவுள்ள கண்காட்சியை, 10 நாடுகளைச் சேர்ந்த 10,000 பேர் பார்வையிடுவார்கள் என்று, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கண்காட்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர், பி2பி வர்த்தகர்கள், வெளிநாட்டு வர்த்தக பிரதிநிதிகள் ஏராளமானோர் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. இந்திய நறுமண பொருட்கள் துறை, அண்மைக்காலமாக சிறந்த வளர்ச்சி பெற்று வருவதாகவும் ஆண்டு சந்தை மதிப்பு 10,000 கோடி ரூபாய் முதல் 12,000 கோடி ரூபாய் வரை என்றும் இத்துறையினர் தெரிவித்தனர்.
இந்திய அகர்பத்தி உற்பத்தி துறை ஆண்டுக்கு 8.60% வளர்ச்சி கண்டு வருகிறது.