தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/காலி கன்டெய்னர் கட்டணத்துக்கு எதிர்ப்பு நவ., 15 முதல் முகவர்கள் வேலை நிறுத்தம்

காலி கன்டெய்னர் கட்டணத்துக்கு எதிர்ப்பு நவ., 15 முதல் முகவர்கள் வேலை நிறுத்தம்

காலி கன்டெய்னர் கட்டணத்துக்கு எதிர்ப்பு நவ., 15 முதல் முகவர்கள் வேலை நிறுத்தம்


UPDATED : அக் 31, 2026 12:00 AM

ADDED : அக் 30, 2026 10:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 12:00 AM ADDED : அக் 30, 2026 10:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை துறைமுகத்தில் மூன்றாம் தரப்பினர் நடத்தும் கன்டெய்னர் யார்டுகள் வாயிலாக, ஒரு கன்டெய்னருக்கு 1,000 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கும் முறைக்கு, சென்னை சுங்க முகவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை கண்டித்து, வரும் நவ., 15ம் தேதி முதல் சரக்குகள் கையாளுவதை புறக்கணிக்கவும் அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.

இது குறித்து, சங்கத்தின் தலைவர் நடராஜன், செயலர் சேகர் ஆகியோர் நேற்று அளித்த பேட்டி:

சென்னை துறைமுகம் மாதந்தோறும் மூன்று லட்சம் கன்டெய்னர்களை கையாள்கிறது. இதில், எம்.எஸ்.சி., கப்பல் நிறுவனத்தின் பங்களிப்பு மட்டும் 25,000 கன்டெய்னர்களாகும். தற்போது, எம்.எஸ்.சி., நிறுவனம் ஒரு கன்டெய்னருக்கு 1,000 ரூபாய் கட்டணம் வசூலித்து வருகிறது. இந்த கட்டணத்தை நேரடியாக வசூலிக்காமல், தங்களால் நியமிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு கன்டெய்னர் யார்டுகள் வாயிலாக வசூலிக்கிறது.

சென்னையைச் சுற்றி யுள்ள அங்கீகாரம் பெறாத காலி கன்டெய்னர் யார்டுகளை நடத்தும் மூன்றாம் தரப்பினரிடம், இத்தகைய கட்டண வசூல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வெளிப்படைத்தன்மையற்றதாகவும், பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் உள்ளது. எனவே, இந்த கட்டண வசூல் நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இந்த கட்டண வசூல் தொடர அனுமதிக்கப்பட்டால், ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு, 300 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இது துறைமுகத்தின் வர்த்தக வளர்ச்சியையும், ஒட்டுமொத்த ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தையும் கடுமையாகப் பாதிக்கும்.

இந்த கட்டணத்தை நிறுத்த தவறினால், வரும் நவ., 15ம் தேதி முதல் அந்நிறுவனத்தின் ஏற்றுமதி சரக்குகளை கையாளும் பணிகளை சங்க உறுப்பினர்கள் புறக்கணிப்பர். பிரச்னைக்கு தீர்வு காணப்படாவிட்டால், டிச., 30ம் தேதி முதல் இறக்குமதி சரக்குகளை கையாளும் பணிகளையும் புறக்கணிப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us