ADDED : டிச 03, 2024 10:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்:அமெரிக்க அதிபராக ஜோ பைடனின் இறுதிக்கட்ட முடிவுகளில் ஒன்றாக, இந்தியாவுக்கு ஹெலிகாப்டர் விற்பனை செய்வது தொடர்பான கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறன்களை மேம்படுத்தி, தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களைத் தடுக்கும் திறனை வலுப்படுத்தும் என்று, அமெரிக்க அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சோதனை உபகரணங்கள், வெடிமருந்துகள் ஆகியவற்றையும் இந்தியா வாங்க இருக்கிறது. இதற்கான முக்கிய ஒப்பந்ததாரராக 'லாக்ஹீட் மார்ட்டின் ரோட்டரி மற்றும் மிஷன் சிஸ்டம்ஸ்' செயல்பட உள்ளது.