ADDED : ஜூலை 10, 2025 11:57 PM

கோவை:கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கமான கொடிசியா சார்பில், 23வது 'அக்ரி இன்டெக்ஸ் 2025' வேளாண் வர்த்தக கண்காட்சி, கொடிசியா வளாகத்தில் நேற்று துவங்கியது. கண்காட்சியை, பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் துவக்கி வைத்தார்.
கொடிசியா வளாகத்தில் 450க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சார்பில், 600 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளின் ஸ்டால்களும் இடம் பெற்றுள்ளன.
விவசாயம், வேளாண்மை, தோட்டக்கலை, உணவு பதப்படுத்துதல், பண்ணை பராமரிப்பு, பால் பொருட்கள், கோழிப்பண்ணை, கால்நடை வளர்ப்பு.
மீன் வளர்ப்பு, வீட்டுத் தோட்டம், துல்லிய வேளாண்மை, சோலார் பம்ப்கள், நுண்நீர் பாசனம், தானியங்கி பாசனம், பண்ணை இயந்திரமயமாக்கல், மதிப்புகூட்டுதல், ட்ரோன் தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்த தொழில்நுட்பங்களும், கருவிகளும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.
கண்காட்சி வரும் 14ம் தேதி வரை நடக்கிறது.