ADDED : ஆக 13, 2025 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'ஈஷா மண் காப்போம்' மற்றும் எஸ்.ஆர்.எம்., அறிவியல் தொழில்நுட்ப கல்லுாரி சார்பில், 'அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 2.0' எனும் பயிற்சி கருத்தரங்கம், சென்னை காட்டாங்குளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலை வளாகத்தில், வரும் ஆக.,17ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த கருத்தரங்கத்தை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் துவக்கி வைக்க உள்ளார். இதில், நபார்டு கடனுதவி திட்டங்கள், டிஜிட்டல் மார்க்கெட் டிங் ஆகியவை குறித்து விளக்கப்படும்.
இந்த கருத்தரங்கில் வேளாண் சார்ந்த புதுமையான தயாரிப்புகளை கொண்ட நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகளின் கண்காட்சிக் கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.