ADDED : ஜூன் 07, 2026 01:07 AM

குதிரைவாலி
கடந்த வாரம் : ரூ.52.00
தற்போது : ரூ.53.00
குதிரைவாலி வரத்து முடிந்துவிட்டது. வரும் டிசம்பர் மாதம்தான் வரத்து ஆரம்பிக்கும். அதுவரை சிறிய ஏற்றத்துடன் குதிரைவாலியின் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை
திருமங்கலம், மதுரை.
பனிப்பயறு (நரிப்பயறு)
கடந்த வாரம் : ரூ.142.00
தற்போது : ரூ.145.00
வரத்து முடிந்துவிட்டது. இருப்பில் உள்ள பனிப்பயறு மட்டுமே தற்போது வருகிறது. தரத்தை பொறுத்து 123 ரூபாய் முதல் 145 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த விலையே நீடிக்க வாய்ப்புள்ளது.
சந்தை
செஞ்சி, விழுப்புரம்.
நெல்லிக்காய்
கடந்த வாரம் : ரூ.40.00
தற்போது : ரூ.40.00
நெல்லிக்காய் வரத்து சீராக உள்ளது. ஆனால், விலை குறைந்து காணப்படுகிறது. தேவை அதிகரித்தால் விலை உயர வாய்ப்புள்ளது. இல்லையேல் இதே விலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை
திருமங்கலம், மதுரை.
