ADDED : அக் 19, 2024 02:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகின் மிகப்பெரும் சிப் தயாரிப்பு நிறுவனமான 'என்விடியா' உடன் இணைந்து, 'ஏ.ஐ., கிளவுட்' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தகவல் சேமிப்பகம் ஏற்படுத்த பேச்சு நடத்தி வருவதாக, 'டாடா கம்யூனிகேஷன்ஸ்' தெரிவித்துள்ளது.
இதற்காக, நிறுவன வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்த பேசி வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் சோதனைகளை துவங்க உள்ளதாகவும், டாடா கம்யூனிகேஷன்ஸ் நிர்வாக இயக்குனர் ஏ.எஸ்.லஷ்மிநாராயணன் தெரிவித்துள்ளார்.

