தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ ஏ.ஐ., வளர்ச்சி ஓபன் ஏ.ஐ., விஞ்ஞானி எச்சரிக்கை

 ஏ.ஐ., வளர்ச்சி ஓபன் ஏ.ஐ., விஞ்ஞானி எச்சரிக்கை

 ஏ.ஐ., வளர்ச்சி ஓபன் ஏ.ஐ., விஞ்ஞானி எச்சரிக்கை


ADDED : செப் 08, 2026 07:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 07:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: செயற்கை நுண்ணறிவான ஏ.ஐ.,யின் அதிவேக வளர்ச்சியால் ஏற்படக்கூடிய கடுமையான பின்விளைவுகளை எதிர்கொள்ள இங்கு யாரும் தயாராக இல்லை என ஓபன் ஏ.ஐ., நிறுவன தலைமை விஞ்ஞானி ஜேக்கப் பசோக்கி எச்சரித்துள்ளார்.

ஏலியன் மைண்டு என்ற பெயரில் அவர் பதிவை வெளியிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவுக்கான பாதுகாப்பு அரணை ஏற்படுத்தி, பகிர்ந்து கொள்ளும் வரை அதன் பொதுவெளி பயன்பாட்டை குறைத்து கொள்ள அனைவரும் முன்வர வேண்டுமென நம்புவதாக அதில் கூறியுள்ளார்.

எதிர்கால ஏ.ஐ., முன்னேற்றங்கள் உலகம் முழுதும் அரசுகளின் முன்னுரிமையாக இருப்பது அவசியம் என்றும் அதிவிரைவாக பயன்பாட்டுக்கு வரும் ஏ.ஐ., போன்ற இயந்திர மதிநுட்பத்தின் பின்விளைவுகளை அனைவரும் உச்சபட்ச எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us