ADDED : அக் 01, 2024 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமான நிறுவனத்துடன், 'ஏ.ஐ.எக்ஸ்., கனெக்ட்' நிறுவனத்தின் இணைப்பு நிறைவடைந்துள்ளதாக, விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
'டாடா' குழுமத்தைச் சேர்ந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், 'ஏர் ஏசியா' என்ற பெயரில் செயல்பட்டு வந்து, பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஏ.ஐ.எக்ஸ். கனெக்ட் ஆகிய நிறுவனங்களை இணைக்க முடிவு செய்யப்பட்டது.
இரண்டு நிறுவனங்களின் இணைப்பின் வாயிலாக, டாடா குழுமத்தின் குறைந்த கட்டண விமான சேவை, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் பெரிய அளவை எட்டி உள்ளது.