ADDED : அக் 31, 2025 03:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹைதராபாத்:விமான இன்ஜின்களை உற்பத்தி செய்யும் பிரான்சின் சாப்ரான் ஏர்கி ராப்ட் இன்ஜின்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, இன்ஜின் உதிரிபாக உற்பத்தி ஆலையை ஹைதராபாதில் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம் துவக்கியுள்ளது.
அமெரிக்காவின் விமான இன்ஜின் உற்பத்தியாளரான ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் இணைந்து, சி.எப்.எம்., இன்டர்நேஷனல் என்ற பெயரில், குறுகிய உடல் அமைப்பு கொண்ட பயணியர் விமானங்களுக்கான லீப் என்ற இன்ஜினை சாப்ரான் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த இன்ஜினில் பயன்படுத்தப்படும் முக்கிய உதிரிபாகங்களை டாடா நிறுவனம் உற்பத்தி செய்கிறது. உலகளவில் இந்த இன்ஜினை பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

