ADDED : ஜூலை 12, 2025 10:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:அனில் அம்பானி யின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம், வரும் 2028க்குள் உள்நாட்டிலேயே விமானங்களை உற்பத்தி செய்ய, 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
அதன் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனம், இதற்கு, 17,600 கோடி ரூபாய் நிதி திரட்டி, இதில் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது.
மேலும், இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான, ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர்ஸ், பால்கன் 2000 என்ற சொகுசு விமானத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்ய, டசால்ட் ஏவியேஷனுடன் கூட்டு சேர்ந்து உள்ளது.
இதற்காக, மஹாராஷ்டிராவின் நாக்பூரில், உற்பத்தி ஆலை அமைக்க உள்ளது.

