'நெடுஞ்சாலை பயணத்தில் அலெர்ட்' ஜியோ - என்.எச்.ஏ.ஐ., ஒப்பந்தம்
'நெடுஞ்சாலை பயணத்தில் அலெர்ட்' ஜியோ - என்.எச்.ஏ.ஐ., ஒப்பந்தம்
ADDED : டிச 03, 2025 04:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : நாடு முழுதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான, தடையற்ற பயணத்தை உறுதி செய்வதற்காக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமான என்.எச்.ஏ.ஐ., ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, ஜியோ வாடிக்கையாளர்களுக்கு, தானியங்கி அமைப்பானது, ஆபத்தான வளைவுகள், கால்நடைகள் நடமாடும் பகுதி மற்றும் மூடுபனி படர்ந்த பகுதிகள், விபத்து, வெள்ளம் போன்றவற்றால் தற்காலிக போக்குவரத்து மாற்றம் ஆகியவை குறித்து எஸ்.எம்.எஸ்., வாட்ஸாப் வாயிலாக முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்கும்.

