ADDED : அக் 30, 2024 08:22 PM

சென்னை:தமிழக அரசின், 'சிட்கோ' எனப்படும் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெற, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழிற்பேட்டைகளை அமைத்து வருகிறது.
தற்போது, சென்னை - கிண்டி, அம்பத்துார், செங்கல்பட்டு - தண்டரை உட்பட மாநிலம் முழுதும், 130 தொழிற்பேட்டைகள் உள்ளன.
அவற்றில் செயல்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
செங்கல்பட்டில் கொடூர் உள்ளிட்ட பல தொழிற்பேட்டைகளில் தொழில் நிறுவனங்களுக்கு மனைகள் ஒதுக்கியது போக, காலி மனைகள் உள்ளன. இவற்றை தொழில்முனைவோருக்கு ஒதுக்கீடு செய்யும் பணியில், சிட்கோ ஈடுபட்டுள்ளது.
இதற்கு, அதன் இணைய தளத்தில் காலி மனைகளின் விபரங்களை பார்த்து, விண்ணப்பிக்க வேண்டும். பின், விண்ணப்பதார்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு, மனைகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும்.