ADDED : ஜன 23, 2025 10:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:கரீபியன் தீவு நாடான ஜமைக்காவைச் சேர்ந்த, 'ஆம்பர் கனெக்ட்' நிறுவனம், நடப்பாண்டு இறுதிக்குள், கோவையில் 13 கோடி ரூபாய் செலவில், புதுமை மையத்தை திறக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 4,000 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்படவுள்ள இந்த மையத்தில் உருவாக்கப்படும் மென்பொருள், உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிப்படியாக பணியமர்த்தல்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், முதற்கட்டமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1,000 பணியாளர்களை அமர்த்த உள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

