அமெரிக்காவும் கடனில் தத்தளிக்கிறது 1 லட்சம் கோடி டாலரை தாண்டிய வட்டி
அமெரிக்காவும் கடனில் தத்தளிக்கிறது 1 லட்சம் கோடி டாலரை தாண்டிய வட்டி
ADDED : அக் 20, 2024 02:15 AM

வாஷிங்டன்:அமெரிக்க அரசின் கடனுக்கான வட்டி மட்டும், 1 லட்சம் கோடி டாலரை, அதாவது ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 84 லட்சம் கோடியை தாண்டியதால், நாட்டின் பட்ஜெட் பற்றாக்குறை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அமெரிக்காவில், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் பற்றாக்குறை, 1.80 லட்சம் கோடி டாலர் என அந்நாட்டு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டைவிட இது, 8 சதவீதம் அதிகம்.
கொரோனா காலத்தில் பல லட்சம் கோடி டாலர்களை அமெரிக்க அரசு செலவிட்டதால், பட்ஜெட் பற்றாக்குறை அதிகரித்த நிலையில், நடப்பு நிதியாண்டில் அதுபோன்ற பெரிய செலவழிப்பு ஏதுமின்றி, மூன்றாவது மிகப்பெரிய பட்ஜெட் பற்றாக்குறையை நாடு சந்தித்துஉள்ளது.
கடந்த 2023 நிதியாண்டுக்குப் பின், இதுவரை அமெரிக்க அரசின் கடன் 2.30 லட்சம் கோடி டாலர் அதிகரித்து, மொத்த கடன் 35.70 லட்சம் கோடி டாலராகியுள்ளது.
நடப்பு ஆண்டில் கடனுக்கு வட்டியாக மட்டும், அமெரிக்க அரசு 1.16 லட்சம் கோடி டாலரை செலுத்தியதே பட்ஜெட் பற்றாக்குறை புதிய உச்சம் தொட காரணமானது.