அமெரிக்க காலணி நிறுவனம் 'நியூ பேலன்ஸ்' தமிழகத்திலிருந்து ஏற்றுமதியை துவக்கியது
அமெரிக்க காலணி நிறுவனம் 'நியூ பேலன்ஸ்' தமிழகத்திலிருந்து ஏற்றுமதியை துவக்கியது
ADDED : ஆக 27, 2025 01:15 AM

சென்னை:அமெரிக்காவின் பாஸ்டன் பகுதியைச் சேர்ந்த காலணி நிறுவனமான 'நியூ பேலன்ஸ் அத்லெடிக்ஸ்', தனது தமிழக ஆலையில் இருந்து சர்வதேச சந்தைக்கு முதலாவது ஏற்றுமதியை துவங்கியுள்ளது.
நியூ பேலன்ஸ் அத்லெடிக்ஸ் காலணி நிறுவனத்தின் இந்திய தொழிற்சாலையின் புதிய மைல்கல் இது என, மாநில முதலீட்டு மேம்பாட்டு ஏஜன்சியான 'கெய்டன்ஸ்' வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாஸ்டன் பகுதியில் முன்னணி காலணி பிராண்டான நியூ பேலன்ஸ், தமிழகத்தில் உருவாக்கப்பட்ட காலணிகளை, முதல்முறையாக ஏற்றுமதி செய்துள்ளதாக அதன் சமூக வலைதள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'பரிதா குழுமம்' மற்றும் தைவானைச் சேர்ந்த சி.ஜே., குழுமம் ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்து, இந்த ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.
திருப்பத்துார் - ஆம்பூர் தொழில் வழித்தடத்தில் புதிய ஆலை அமைக்கவும், நியூ பேலன்ஸ் திட்டமிட்டுள்ளது என்று கெய்டன்ஸ் தெரிவித்து உள்ளது.
திருப்பத்துார் - ஆம்பூர் தொழில் வழித்தடத்தில் புதிய ஆலை அமைக்க, நியூ பேலன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது