அமெரிக்க காப்பீடு நிறுவனங்களும் அதானி குழுமத்தில் முதலீடு
அமெரிக்க காப்பீடு நிறுவனங்களும் அதானி குழுமத்தில் முதலீடு
ADDED : அக் 27, 2025 01:20 AM

புதுடில்லி: அதானி குழும நிறுவனங்களில் எல்.ஐ.சி., மேற்கொண்ட முதலீடுகள் சர்ச்சையை எழுப்பிய நிலையில், அக்குழுமத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள காப்பீட்டு நிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஜூனில், 'அதானி போர்ட்ஸ் அண்டு செஸ்' நிறுவனத்தில் எல்.ஐ.சி., 5,000 கோடி ரூபாயை முதலீடு செய்தது.
அதன்தொடர்ச்சியாக, அதானி மும்பை ஏர்போர்ட் நிறுவனத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த 'ஏதன் இன்சூரன்ஸ்' நிறுவனம் 6,650 கோடி ரூபாயை முதலீடு செய்தது.
இந்நிறுவனத்தில், வேறு பல சர்வதேச காப்பீட்டு நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டி.பி.எஸ்., - டி.இசட்., உள்ளிட்ட உலகளாவிய கடன் வழங்குநர்களிடமிருந்து, 'அதானி கிரீன் எனர்ஜி' நிறுவனம் 2,195 கோடி ரூபாய் நிதியை திரட்டியது.
அதானி குழுமத்தில் எல்.ஐ.சி.,யின் முதலீடு, அக்குழுமத்தின் மொத்தக் கடனில் 2 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸ், ஐ.டி.சி., டாடா குழுமம் போன்ற நிறுவனங்களிலேயே எல்.ஐ.சி.,யின் முதலீடுகள் அதிகமாக உள்ளன.
அதானி குழுமத்தில் முதலீடு செய்ய அரசு அதிகாரிகள் செல்வாக்கு செலுத்தியதாக வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட அறிக்கை ஆதாரமற்றது என எல்.ஐ.சி., தெரிவித்து இ ருந்தது.
மேலும், அதன் முதலீடு கள் வாரியத்தின் ஒப்புதலுடன், நிறுவனத்தின் அடிப்படைகளின்படியே முதலீடு செய்யப்படுவதா கவும் எல்.ஐ,.சி., விளக்கம் அளித்திருந்தது.

