UPDATED : ஆக 24, 2025 09:21 PM
ADDED : ஆக 24, 2025 09:17 PM

இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் இறங்குமுகத்துடன் முடிந்தது. தொடர்ந்து ஆறு நாட்கள் ஏறுமுகத்திற்கு பிறகு, வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 694 புள்ளிகள் சரிந்து, 81,307 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 214 புள்ளிகள் சரிந்து, 24,870 புள்ளியாக இருந்தது. எனினும் நிகர அடிப்படையில் ஏறுமுகம் கண்டன.
பி.எஸ்.இ., மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் லேசாக இறங்குமுகத்துடன் முடிந்தன. வங்கித்துறை, நுகர்வோர் துறை உள்ளிட்டவற்றில் முதலீட்டாளர்கள் லாபம் பார்த்தலில் ஈடுபட்டனர். வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.
-
ஏறுமுகம் கண்ட பங்குகள்
1. எம் & எம் - 3,400.00 (0.79)
2. மாருதி சுசூகி- 14,375.00 (0.65)
3. சன்பார்மா- 1,642.90 (0.20)
-
இறங்குமுகம் கண்ட பங்குகள்
1. ஏசியன் பெயிண்ட்ஸ்- 2,504.20 (2.44)
2. அல்ட்ராடெக்சிமெண்ட்- 12,614.70 (1.94)
3. ஐ.டி.சி., - 398.30 (1.84)