ADDED : பிப் 20, 2025 11:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகரான அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம், மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, அவரது பதவிக்காலம் வரும் 2027 மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஜனவரி மாதம், தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்ட அனந்த நாகேஸ்வரனின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய இருந்தது.
பொருளாதாரம் தொடர்பான பல்வேறு விஷயங்களில் அரசுக்கு ஆலோசனை வழங்குவதிலும், பட்ஜெட்டுக்கு முந்தைய நாள் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கையை தயார் செய்வதிலும், தலைமை பொருளாதார ஆலோசகரின் பங்கு மிகவும் முக்கியமானது.

