sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எல்லாருக்கும் எல்லாம் என உழைக்கிறோம்: பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

/

எல்லாருக்கும் எல்லாம் என உழைக்கிறோம்: பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

எல்லாருக்கும் எல்லாம் என உழைக்கிறோம்: பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

எல்லாருக்கும் எல்லாம் என உழைக்கிறோம்: பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

53


UPDATED : ஜன 14, 2026 11:27 AM

ADDED : ஜன 14, 2026 11:22 AM

Google News

UPDATED : ஜன 14, 2026 11:27 AM ADDED : ஜன 14, 2026 11:22 AM

53


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி, சமத்துவ நிலையை அனைவரும் அடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு, திமுக அரசு உழைத்து கொண்டு இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சென்னை தலைமைச் செயலக ஊழியர்களுடன் பொங்கல் விழாவை முதல்வர் ஸ்டாலின் கொண்டாடினார். பொங்கல் விழாவில் அவர் பேசியதாவது: அனைவருக்கும் வணக்கம், தமிழகம் முழுவதும் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி கொண்டு இருக்கிறோம்.

எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி, சமத்துவ நிலையை அனைவரும் அடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு, திமுக அரசு பணியாற்றி கொண்டு இருக்கிறது. நாங்கள் மட்டுமல்ல, நீங்களும் சேர்ந்து தான் உழைத்து கொண்டு இருக்கிறீர்கள்.

தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, தலைமை செயலகத்தில் இருந்து நீங்கள் எல்லாம் நேரம், காலம் பார்க்காமல் உழைத்து கொண்டு இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்களுடன் இந்த பொங்கல் விழாவை கொண்டாடுவதில், நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த மகிழ்ச்சி உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பொங்கட்டும், பொங்கட்டும் என்று இந்த இனிய தினத்தில் எடுத்து சொல்லி உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.






      Dinamalar
      Follow us