வான்வெளி துறை முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகத்துடன் போட்டி போடும் ஆந்திரா
வான்வெளி துறை முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகத்துடன் போட்டி போடும் ஆந்திரா
ADDED : ஆக 12, 2025 07:07 AM

சென்னை: வான்வெளி துறையில் முதலீட்டை ஈர்ப்பதில், கர்நாடகாவுக்கு போட்டியாக மாற தமிழகம் முயன்று வந்த நிலையில், தற்போது ஆந்திராவும் களமிறங்கியுள்ளது. விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, ஆந்திர மாநிலத்திற்கு முதலீட்டை ஈர்க்க தீவிரம் காட்டுவதால், தமிழகத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின், 'போயிங்' நிறுவனத்தின் முதலீட்டை ஈர்க்க தமிழகம் பேச்சு நடத்தி வந்த நிலையில், அந்நிறுவனம் பெங்களூருவில் கடந்த ஆண்டில், 1,600 கோடி ரூபாய் முதலீட்டில், இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப மையம் அமைத்து விட்டது.
இப்படிப்பட்ட சூழலில், அண்மையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து, அதிநவீன ஆளில்லா போர் விமானங்களை வாங்க, ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. விமானங்கள், அமெரிக்காவில் இருந்து வந்தாலும், பராமரிப்பு பணிகள் இந்தியாவில் தான் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்கான பணிகளுக்கு ஜெனரல் அட்டாமிக்ஸ், பல மாநிலங்களில் இடம் பார்த்து வருகிறது. இந்த விபரத்தை அறிந்து, தமிழகத்தில் தொழில் துவங்க வருமாறு அதிகாரிகள், அந்நிறுவனத்துடன் சில மாதங்களுக்கு முன் நேரடி பேச்சு நடத்தினர். ராம்மோகன் நாயுடு, வான்வெளி முதலீடுகளை ஆந்திராவுக்கு ஈர்க்க தீவிரம் காட்டி வருகிறார்.
இதையடுத்து, வான்வெளி துறை முதலீடுகளை ஈர்ப்பதில் மும்முனை போட்டி எழுந்துள்ளது.
விமான போக்குவரத்து துறை அமைச்சராக ராம்மோகன் நாயுடு இருக்கிறார் அரசியல் ரீதியாக மத்திய அரசின் ஆதரவும் ஆந்திராவுக்கு உள்ளது
தமிழக முயற்சிகள் தமிழக வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை வெளியீடு அடுத்த 10 ஆண்டுகளில், 75,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க திட்டம் ஒரு லட்சம் நேரடி, மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கவும் திட்டம் கோவை மாவட்டம் வாரப்பட்டி மற்றும் சூலுாரில் தொழில் பூங்கா