ADDED : ஆக 13, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1,400
மின்சார சேவைகள் வழங்கி வரும் 'பவரிகா' நிறுவனம், ஐ.பி.ஓ., வாயிலாக 1,400 கோடி ரூபாய் நிதி திரட்ட, செபியிடம் விண்ணப்பித்துள்ளது. மும்பையை சேர்ந்த இந்நிறுவனம், பங்குதாரர்களின் பங்கு விற்பனை மற்றும் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக தலா 700 கோடி ரூபாய் திரட்ட உள்ளது.
6.64
கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி வரையிலான நடப்பு நிதியாண்டுக்கான நிகர நேரடி வரி வசூல், 3.95 சதவீதம் குறைந்து, 6.64 லட்சம் கோடி ரூபாயானது. ரீபண்டுகள் அதிகரித்ததே இந்த சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. மொத்த வரி வசூலில், கார்ப்பரேட் வரி 2.29 லட்சம் கோடி ரூபாய்; தனி நபர் வரி 4.12 லட்சம் கோடி ரூபாய்; பங்கு பரிவர்த்தனை வரி 22,362 கோடி ரூபாய் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.