உலகளாவிய திறன் மையமாக்க கவுன்சில் அமைத்தது ஆந்திரா
உலகளாவிய திறன் மையமாக்க கவுன்சில் அமைத்தது ஆந்திரா
ADDED : செப் 10, 2025 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜி.சி.சி., எனும் உலகளாவிய திறன் மையங்களின் முக்கிய மையமாக ஆந்திராவை உருவாக்குவதற்காக, 360 டிகிரி ஆலோசனை கவுன்சிலை அம்மாநில அரசு அமைத்துள்ளது.
இந்த கவுன்சிலுக்கு ஆந்திர தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நர லோகேஷ் தலைமை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாஸ்காம் உள்ளிட்ட தொழில்துறை அமைப்புகள், எர்ன்ஸ்ட் அண்டு யங், கே.பி.எம்.ஜி., டெலாய்ட் உள்ளிட்ட ஆலோசனை நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்த கவுன்சிலில் இடம்பெறுவார்கள். ஆந்திராவின் ஜி.சி.சி., துறைக்கான ஐந்து ஆண்டு வளர்ச்சி பாதையை உருவாக்க வேண்டியது இந்த கவுன்சிலின் பொறுப்பாகும்.