அனில் அம்பானி நிறுவனத்தின் கணக்குகளை முடக்க உத்தரவு
அனில் அம்பானி நிறுவனத்தின் கணக்குகளை முடக்க உத்தரவு
ADDED : டிச 03, 2024 11:19 PM

'செபி' விதித்த அபராதத் தொகையை கட்டத் தவறியதால், அனில் அம்பானியின் 'ரிலையன்ஸ் பிக் என்டர்டெயின்மென்ட்' நிறுவன வங்கி கணக்குகள், பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்டு கணக்குகளை முடக்க செபி உத்தரவிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவன சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், வட்டி மற்றும் மீட்பு செலவுகள் உட்பட 26 கோடி ரூபாய் செலுத்துமாறு செபி உத்தரவிட்டு கடந்த மாதம் 14ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதை செலுத்தத் தவறியதையடுத்து, வங்கி கணக்குகள் மற்றும் டிமேட் கணக்குகள் அல்லது மியூச்சுவல் பண்டு ஹோல்டிங்குகள் உள்ளிட்டவற்றில் ஒன்றுடன் ஒன்று இணைக்குமாறு செபி உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க அனுமதிக்க வேண்டாம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செமிகண்டக்டர் ஆலை ஜப்பானிய நிறுவனங்கள் ஆர்வம்
ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் செமிகண்டக்டர் ஆலைகளை அமைக்க அதிக ஆர்வத்துடன் உள்ளதாக அமெரிக்க ஆலோசனை நிறுவனமான டிலாய்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது:
கடந்த ஜூலை மாதம், செமிகண்டக்டர் உற்பத்திக்கான கூட்டு முயற்சிக்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவைத் தொடர்ந்து, ஜப்பானும் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், செமிகண்டக்டர் வடிவமைப்பு, உற்பத்தி, உபகரணங்கள் ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் வினியோக தொடர் பராமரிப்பு உள்ளிட்டவை அடங்கும்.
இதைத்தொடர்ந்து, இந்தியாவில் செமிகண்டக்டர் ஆலைகளை அமைப்பதில் ஜப்பானைச் சேர்ந்த நிறுவனங்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளன. பத்து ஆண்டுகளில் 10 செமிகண்டக்டர் ஆலைகளை அமைக்க இந்தியா விரும்புகிறது. இத்துறை வளர்ச்சிக்கு இந்தியாவில் திறமையான பணியாளர்கள், நிதி மற்றும் ஆதரவு நடவடிக்கைகளின் தொடர்ச்சி முக்கியமானதாகும்.