உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஆக 21, 2026 06:47 AM
அ நிறம் | அளவு
ஓசூர்: கிளாட் எனும் பெயரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனமான ஆந்த்ரோபிக், ஓசூரில் ஆந்த்ரோபிக் கிளாட் இன்னொவேஷன் ஆய்வகத்தை திறந்துள்ளது. ஜி.டபுள்யூ.சி. டேட்டா ஏ.ஐ., வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகத்தை, அந்நிறுவனத்தின் இந்தியத் தலைமை இயக்குநர் இரினா கோஷ் மற்றும் இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் தொடங்கி வைத்தனர். தமிழகத்தில் அந்நிறுவனம் அமைக்கும் முதல் தனிச்சிறப்பு மையம் இதுவாகும்.
'கிளாட்' மாதிரிகளைப் பயன்படுத்தி, சேவைகளை தானியங்கி முறையில் வழங்குதல், தரவுப் பகுப்பாய்வு, பணிச்சூழலை நவீனமயமாக்குதல் உள்ளிட்ட துறைகளில் ஏஜென்டிக் ஏ.ஐ., தீர்வுகளை இம்மையம் வழங்கும். தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகளுக்கு இச்சேவைகள் வழங்கப்படும்.
