ADDED : நவ 04, 2024 01:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'செயின்ட் கோபைன்' நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில், 127 ஏக்கரில் உலகளாவிய தொழிற்சாலை அமைக்க உள்ளது. இதற்காக அந்நிறுவனம், 2,858 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
ஆலையின் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு, சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கேட்டு, செயிண்ட் கோபைன் விண்ணப்பித்து உள்ளது. இந்த ஆலையால், 1,140 வேலைவாய்ப்புகள் உருவாகும்.
செயின்ட் கோபைன் மோட்டார் வாகனம், கட்டுமானம் போன்றவற்றுக்கான கண்ணாடி உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.