ADDED : ஜூன் 25, 2025 12:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'எலக்ட்ரானிக்ஸ் பஜார்' என்ற பெயரில், புதுப்பிக்கப்பட்ட லேப்டாப், டெக்ஸ்டாப் உள்ளிட்டவற்றை இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஐரோப்பாவில் விற்பனை செய்து வரும் ஜி.என்.ஜி., எலக்ட்ரானிக்ஸ், ஏற்கனவே முதலீட்டாளர் வசமுள்ள 51 லட்சம் பங்குகளுடன், புதிய பங்கு விற்பனை வாயிலாக, 450 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, ஐ.பி.ஓ., வரவுள்ளது. நிதியை கடன்களை திருப்பி செலுத்தவும், நிறுவனத்தின் பிற செலவுகளுக்கு பயன்படுத்தவும் உள்ளது.
இதே போன்று, சென்னையை தலைமையிடமாக கொண்டு தளவாட சேவைகளை வழங்கி வரும் குளோட்டீஸ் லாஜிஸ்டிக்ஸ், முதலீட்டாளர் வசமுள்ள 1.45 கோடி பங்குகள் விற்பனையுடன், புதிய பங்கு விற்பனை வாயிலாக 160 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட ஐ.பி.ஓ., வருகிறது. இதனை மூலதன செலவினங்களுக்கும், வர்த்தக வாகனங்கள் வாங்குவதற்கும் பயன்படுத்த உள்ளது.