ADDED : மார் 29, 2025 01:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ராணுவ அமைச்சகத்திடம் இருந்து, 700 கோடி ரூபாய் மதிப்பிலான வாகன ஆர்டர்களை, 'அசோக் லேலாண்ட்' நிறுவனத்தின் ராணுவ வணிகப் பிரிவு பெற்று உள்ளது.
துருப்பு மற்றும் தளவாட போக்குவரத்து, இதர பாதுகாப்பு அமைப்புகள், ஆயுதங்கள் பயன்பாடு ஆகியவற்றுக்கு இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதன் வினியோகம், வரும் நிதியாண்டு முதல் துவங்கும் என இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
லாரிகள், 'ஷார்ட் சேசிஸ்' பஸ்கள், சிறப்பு ராணுவ கவச வாகனங்கள் ஆகியவற்றை இந்நிறுவனம் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் பெறப்பட்டு உள்ளது.