ADDED : டிச 10, 2025 01:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: இந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம், தொழிற்சாலை மற்றும் கட்டுமான துறை இயந்திரங்களுக்கான சிறிய ரக இன்ஜின் ரகங்களை அறிமுகம் செய்துள்ளது.
பெங்களூருவில் நடைப்பெற்று வரும் எக்ஸ்கான் கண்காட்சியில், பி15 எனும் 49 மற்றும் 55 ஹெச்.பி., மற்றும் ஹெச்4 யூனிபேக் எனும் - 55 மற்றும் 74 ஹெச்.பி., இன்ஜின்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
நிகழ்ச்சியில் பங்கேற்ற நிறுவனத்தின் இலகு ரக வாகன பிரிவின் தலைவர் அமன் தீப் சிங் கூறுகையில், “குறைந்த செலவில் பயன்படுத்த வசதியான தீர்வுகளையே எங்கள் வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர்' என்றார்.

