ADDED : செப் 04, 2025 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு:பெங்களூரில் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்க இருப்பதாக, ஆஸ்திரேலிய மென்பொருள் சேவை நிறுவனமான அட்லாசியன் அறிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சதுரடி பரப்பளவில் அமைய உள்ள புதிய மையம், தற்போதைய பெங்களூரு அலுவலகத்தை விட 4 மடங்கு பரப்பளவில் பெரிதாக இருக்கும்.
அட்லாசியன் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு இந்தியாவில் வேகமாக வளர்ச்சி கண்டு வருவதோடு, தயாரிப்புகளை மேம்படுத்துவதில், இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது.
ஆஸ்திரேலியா, அமெரிக்காவுக்கு வெளியே, இந்தியாவில் 2,500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.