உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 12, 2026 12:00 AM
ADDED : நவ 11, 2026 10:52 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி: லித்தியம் அயன் பேட்டரிகளின் பிரிக்கப்படாத கழிவுகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
பயன்படுத்தப்பட்ட லித்தியம் -அயன் பேட்டரிகளை பிரித்து மறுசுழற்சி செய்யும்போது கிடைக்கும் துாளில் லித்தியம், கோபால்ட், நிக்கல், மாங்கனீசு போன்ற மதிப்புமிக்க தாதுக்கள் உள்ளன. இவை மின்சார வாகனங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கான பேட்டரிகள் தயாரிப்பில் பெரிதும் பயன்படுகின்றன.
உள்நாட்டிலேயே இவற்றை மறுசுழற்சி செய்து பேட்டரி தயாரிப்புக்கு மீண் டும் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வர்த்தக அமைச்சகம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
