UPDATED : நவ 12, 2026 12:00 AM
ADDED : நவ 11, 2026 10:52 PM

புதுடில்லி: கடந்த அக்., மாதத்தில் நடப்பாண்டுக்கான நெல் கொள்முதல் தொடங்கிய நிலையில், வரத்து குறைவால் கடந்தாண்டை விட கொள்முதல் 19 லட்சம் டன் குறைந்துள்ளது என, இந்திய உணவு கழகம் வெளியிட்டுள்ள தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குறைந்தபட்ச ஆதரவு விலையில், நடப்பாண்டுக்கான நெல் கொள்முதல் 11 மாநிலங்களில் கடந்த அக்., 1 அன்று தொடங்கியது.
கடந்தாண்டு அக்டோபரில் 123 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு அதை விட 19 லட்சம் டன் குறைவாக, 104 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நெல் கொள்முதல் விபரம்
அக்டோபர்
(லட்சம்/டன்னில்)
பஞ்சாப்
2025 : 72.98
2026 : 73.52
தமிழகம்
2025 : 7.51
2026 : 2.87
ஹரியானா
2025 : 38.79
2026 : 26.25
உத்தராகண்ட்
2025 : 3.07
2026 : 0.90
உ.பி.,
2025 : 0.70
2026 : 0.09
