sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

95 சதவீதம் புகார்களுக்கு வங்கி குறைதீர் மையம் தீர்வு

/

95 சதவீதம் புகார்களுக்கு வங்கி குறைதீர் மையம் தீர்வு

95 சதவீதம் புகார்களுக்கு வங்கி குறைதீர் மையம் தீர்வு

95 சதவீதம் புகார்களுக்கு வங்கி குறைதீர் மையம் தீர்வு


ADDED : ஜன 27, 2025 12:58 AM

Google News

ADDED : ஜன 27, 2025 12:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை:கடந்த நிதியாண்டில் ஒருங்கிணைந்த வங்கி குறைதீர்ப்பாளர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட புகார்களில், 95.10 சதவீதம் புகார்களுக்கு தீர்வு கண்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து ஆர்.பி.ஐ., வெளியிட்ட அறிக்கை:

வங்கிச்சேவை குறைபாடு தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது வங்கி சாராத நிறுவனங்கள், 30 நாட்களுக்குள் தீர்வு காணாவிட்டால், வாடிக்கையாளர்கள் வங்கி குறைதீர்ப்பாளரிடம் புகார் அளிக்கலாம்.

இதன்படி, கடந்த 2023--24ம் நிதியாண்டில் ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த குறைதீர்ப்பாளர் மையம், பெறப்பட்ட 2,84,355 புகார்களில், 95.10 சதவீதம் புகார்களுக்கு தீர்வு கண்டுள்ளது.

பெறப்பட்ட மொத்த புகார்களில், ஆன்லைன் போர்ட்டல், இ-மெயில் மற்றும் மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர் கண்காணிப்பு மையம் உள்ளிட்டவை சேர்த்து, டிஜிட்டல் வடிவில் 88.77 சதவீத புகார்களும்; அதிகபட்சமாக, தனிநபர்களிடம் இருந்து 2,56,527 புகார்களும் பெறப்பட்டன.






      Dinamalar
      Follow us