ADDED : அக் 17, 2025 01:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மத்திய அரசு தங்கம், வெள்ளி மற்றும் அனைத்து சமையல் எண்ணெய் ரகங்களுக்கான அடிப்படை இறக்குமதி விலையையும் உயர்த்திஉள்ளது.
சர்வதேச சந்தை நிலவரத்தை பிரதிபலிக்கும் வகையில், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இவற்றின் அடிப்படை இறக்குமதி விலையை மத்திய அரசு மாற்றியமைப்பது வழக்கம்.
இது இறக்குமதியாளர்கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதை கணக்கிட உதவும். இந்தியா தான் சமையல் எண்ணெய் மற்றும் வெள்ளியின் உலகின் மிகப்பெரிய இறக்குமதியாளராகும். தங்கத்தை பொறுத்தவரை, உலகின் இரண்டாவது பெரிய நுகர்வு நாடாகும்.