ADDED : செப் 20, 2024 10:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், பாசுமதி அரிசி விற்பனை 70,000 கோடி ரூபாயை எட்டும் என, தரக்குறியீட்டு நிறுவனமான 'கிரிசில்' தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கிரிசில் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாசுமதி அரிசி உற்பத்தியும், விற்பனை சார்ந்த பிரிவின் வருவாய் வளர்ச்சியும், 4 சதவீதம் அதிகரிக்கக்கூடும். கடந்த நிதியாண்டில், வருவாய் வளர்ச்சி 20 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் அது பெருமளவு வீழ்ச்சி கண்டாலும், தொகை அடிப்படையில் வருவாய் தொகை இதுவரை இல்லாத அளவில் அதிகமாக இருக்கும்.