2 மின் திட்டங்கள் ரூ.15,000 கோடி ஆர்டர் பெற்ற 'பெல்'
2 மின் திட்டங்கள் ரூ.15,000 கோடி ஆர்டர் பெற்ற 'பெல்'
ADDED : அக் 01, 2025 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி, 'பெல்' நிறுவனம், மத்திய பிரதேச மின்சார வாரியத்திடம் இருந்து 15,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டரை பெற்றுள்ளது.
தலா 660 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல்மின் திட்டங்களுக்கான கருவிகளை சப்ளை செய்தல், நிறுவுதல் மற்றும் செயல்பாட்டுக்கு கொண்டு வருதல் ஆகியவை இதில் அடங்கும். திறந்தநிலை டெண்டர் நடைமுறையில் இந்த ஆர்டர்களை பெற்றதாக, பொதுத் துறை நிறுவனமான பெல் தெரிவித்துள்ளது.
ஆர்டர் பெறப்பட்ட 57 மாதங்களுக்கு இரு திட்டங்களையும் நிறைவு செய்ய வேண்டுமென டெண்டர் விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.