150 ராணுவ கவச வாகனங்கள் ஆர்டர் பெற்றது பி.இ.எம்.எல்.,
150 ராணுவ கவச வாகனங்கள் ஆர்டர் பெற்றது பி.இ.எம்.எல்.,
ADDED : ஜூலை 25, 2025 01:06 AM

பெங்களூரு:ராணுவப் பயன்பாட்டுக்கு, 150 ஹெச்.எம்.வி., எனப்படும் கவச வாகனங்களை கொள்முதல் செய்ய, 293.81 கோடி ரூபாய்க்கு ராணுவ அமைச்சகம், மத்திய பொது நிறுவனமான பி.இ.எம்.எல்., என்ற பாரத் எர்த் மூவர்ஸ்க்கு ஆர்டர் வழங்கியுள்ளது.
ராணுவ தேவைக்கேற்ப நம்பகமான மற்றும் பலமான வாகனத்தை உருவாக்கி உள்ளதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த கவச வாகனம், கேரளாவின் பாலக்காடு மற்றும் கர்நாடகத்தின் மைசூரு பகுதிகளில் உள்ள இந்நிறுவன ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதிக எடையை நிலையாகத் துாக்கி செல்ல பேக் போன் சேசிஸ், கரடுமுரடான பகுதிகள், மலை மற்றும் காட்டுப்பாதைகள், இதர கடினமான பகுதிகளில் எளிதாக பயணிக்க 6 - வீல் டிரைவ் அமைப்பு, ஒவ்வொரு சக்கரத்திற்கு தனி சஸ்பென்ஷன் அமைப்பு, அதிக திறன் வெளிப்படுத்தும் ஏர் கூல்டு இன்ஜின், மணல், பனி மற்றும் சேறு பகுதிகளில் எளிதாகப் பயணிக்க டயர் அழுத்தத்தை அதிகப்படுத்தும் வசதி, ஏ.பி.எஸ்., பிரேகிங் வசதி உட்பட பல அம்சங்கள் இந்த கவச வாகனத்தில் வழங்கப்படுகின்றன.
இந்த ராணுவ வாகனம், ஆயுதங்கள், உணவு பொருட்கள் மற்றும் இதர சரக்குகளை தொலைதுார மற்றும் உயரமான பகுதிகளுக்கு கொண்டு செல்ல பயன்படுகிறது.