இத்தாலி நிறுவனத்துடன் பாரத் எர்த் மூவர்ஸ் ஒப்பந்தம்
இத்தாலி நிறுவனத்துடன் பாரத் எர்த் மூவர்ஸ் ஒப்பந்தம்
ADDED : அக் 24, 2025 11:56 PM

பெங்களூரு: இந்தியாவில் நவீன சுரங்க இயந்திரத்தை அறிமுகப்படுத்த, இத்தாலியின் டெஸ்மெக் நிறுவனத்துடன் மத்திய பொதுத்துறை நிறுவனமான பி.இ.எம்.எல்., என்ற பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
டெஸ்மெக் நிறுவனத்தின் சுரங்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்நிறுவனத்தின் இயந்திர அணிவகுப்பை விரிவுபடுத்த, இந்த ஒப்பந்தம் பயன்படுகிறது.
இந்திய சுரங்க துறையில், சுற்றுச்சூழல் மாசுபடாமல், உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் சுரங்க தீர்வுகளை வழங்க, இந்த கூட்டணி உதவும் என எதிர் பார்க்கப்படுகிறது.
அதேபோல், ராணுவ மற்றும் விண்வெளி தொடர்புடைய, குறைந்த எடை கொண்ட பலமான அடுத்த தலைமுறை உதிரிபாகங்களை உற்பத்தி செய்ய, கினிகோ என்ற நிறுவனத்துடன் இந்நிறுவனம் முன்னதாக ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம், சுரங்க, கட்டுமான, ரயில் மற்றும் மெட்ரோ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகிறது.

